தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜகவினால்தான் தமிழகத்தில் பிரிவினை: செல்வப்பெருந்தகை

1 mins read
a6475975-1b3d-47de-acde-3c14416f95dc
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்து கொள்ள, மதுரை சென்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: தமிழக ஊடகம்

பரமக்குடி: தமிழகத்தில் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்படுவதற்கு பாரதிய ஜனதா கட்சி(பாஜக)தான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, பாஜகவைபோல் பிரித்தாளும் கொள்கை காங்கிரஸ் கட்சிக்குக் கிடையாது என்றார்.

பாஜகவால்தான் பாமகவில் தந்தை மகன் இடையே மோதல் உருவாகியுள்ளது. அதிமுகவில் செங்கோட்டையன் பிரிவினைக்கும் பாஜகதான் காரணம். உறவாடிக் கெடுப்பது பாஜகவின் மாடல். ஆமை புகுவதைப் போலப் பாஜக புகும் மாநிலம் சிதைந்து போகும் என்று அவர் கூறினார்.

இ.பி.எஸ். ஆட்சியில் இருந்தபோது மதுரை விமான நிலையத்திற்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்காமல் அமைதியாக இருந்தார். அப்போதே அதைச் செய்திருக்கலாம். அரசியலுக்காகத்தானே பேசுகிறார். உண்மையிலேயே பற்று இருந்திருந்தால் தேர்தல் வரும்போது ஏன் பேச வேண்டும் என்றும் முன்பே ஏன் பேசவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

குறிப்புச் சொற்கள்