திண்டுக்கல்: ஜப்பானைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் தமிழகத்துக்கு வந்து 18 சித்தர்களின் அருள் வேண்டி சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர். பழனி பகுதியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் அந்த யாகம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பழனியில் புலிப்பாணி சித்தரின் சமாதியும் ஆசிரமமும் உள்ளன.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) காலை இந்த ஆசிரமத்தில் ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால் பிள்ளை என்பவரது ஏற்பாட்டில் 18 சித்தர்களுக்குச் சிறப்பு யாகம் நடைபெற்றது.
அப்போது சித்தர்கள் எழுதிய ஓலைச்சுவடிகள், அவர்கள் பாதுகாத்த நவபாஷான சிலைக்கு மலர் வழிபாடும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள், ‘ஓம் அகஸ்தியாயா நம’ என்று முழங்கினர்.
உலக அமைதிக்காக இந்த யாகத்தைச் சிறப்பாக நடத்தியது மகிழ்ச்சி தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

