ரஜினி வீட்டில் கமல்ஹாசன்: திடீர் சந்திப்பு

1 mins read
f7dbd42e-bc4a-4d5a-9a90-f28979beda6f
கமல்ஹாசனைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ரஜினி, எம்பியாகத் தேர்வாகியுள்ள தனது நண்பருக்கு வாழ்த்து தெரிவித்தார். - படம்: ஊடகம்

சென்னை: நடிகர்கள் ரஜினியும் கமல்ஹாசனும் நேரில் சந்தித்துப் பேசினர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இயங்கி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மிக விரைவில் தமது முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ள கமல்ஹாசன் புதன்கிழமை (ஜூலை 16) காலை தமது நீண்டநாள் நண்பரான ரஜினியைப் பார்க்க போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றார். அவரைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ரஜினி, எம்பியாகத் தேர்வாகியுள்ள தனது நண்பருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இருவரும் சிறிது நேரம் உரையாடினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்