சென்னை: மக்கள் நீதி மய்ய பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை அனைவரும் அறிவார்கள்.
“பொதுக்குழு கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராகவும், சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களை கண்டிக்கிற வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றியிருப்பதை வரவேற்கிறேன். கமல்ஹாசனின் அரசியல் பயணம் வெற்றிபெற தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தலைமையில் மநீம கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், செப்.22ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. அதில், மநீம கட்சியின் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

