மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வான கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வான கமல்ஹாசன்

1 mins read
6262deab-b420-45c3-954f-8e1482951501
மக்கம் நீதி மய்யம் கட்சியின் கூட்டத்திற்கு வந்த கமல் ஹாசனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. - படம்: ஊடகம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியின் 2வது பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 1414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2570 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மநீம கட்சியின் தலைவராக மீண்டும் கமல் தேர்வு செய்யப்பட்டார். மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதைக் குறைக்க வேண்டும், தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது உள்ளிட்ட தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

குறிப்புச் சொற்கள்