தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காமராஜர் 50 படங்களில் நடித்து முதல்வராகவில்லை: விஜய்யைத் தாக்கிய சீமான்

1 mins read
48198dca-0b0e-4f5b-89dd-21609b6a9a39
கல்வி விருது விழாவில் பேசிய சீமான். - படம்: தந்தி / இணையம்

சென்னை: மாணவர்களுக்குக் கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவருமான விஜய்யை இளைய காமராஜர் என்று ஆசிரியர் ஒருவர் கூறியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த திரு சீமான், “இதையெல்லாம் கேட்க நேரிடும் என்றுதான் ரொம்ப நாளைக்கு முன்னரே காமராஜர் செத்துப்போய்விட்டார்.

“இளைய காமராஜர் என்று சொன்னவருக்கு காமராஜர் யார் என்றே தெரியாது. அந்த ஆசிரியர் என்ன படித்தாரோ... காமராஜரைப் பற்றிப் படிக்கவில்லை. காமராஜர் 50 படங்கள் நடித்து முதலமைச்சராக வரவில்லை, அரசியலுக்கு வரவில்லை,” என்று திரு சீமான் சாடியதாகத் தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், “நான் யாருடனும் கூட்டு சேரவில்லை. உணவில் மட்டும்தான் கூட்டு, பொரியல். சண்டை என்றால் தனித்துத்தான் போட்டியிடுவேன்.

“கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன தொடர்பு? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செம்மொழி என அறிவித்ததால் செம்மொழி ஆனதா? தமிழ் செம்மொழி என என அனைவரும் கூறுகின்றனர். தமிழ் மொழிக்கு அங்கீகாரம் பெற்றுத்தர நீங்கள் யார்?” என்றும் சீமான் காட்டமாகப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்