காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் சொகுசு காருக்கு தீ வைத்தார்

காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் சொகுசு காருக்கு தீ வைத்தார்

1 mins read
1643b56b-ad77-4cb8-8361-1ede09b41cf1
காதலி மீதான கோபத்தில் காதலன் காருக்கு தீவைத்ததால் அது எரிந்து தீக்கிரையானது. படம்: தமிழக ஊடகம் -

காதலியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆத்திரமடைந்த இளம் மருத்துவர் ஒருவர், தனது ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இதைப் பார்த்து அவருடைய காதலியும் சாலையில் நடந்துசென்ற பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவின், 28. கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தவர், காஞ்சிபுரம் அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் காவ்யா என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவரும் காரில் வெளியே சென்றபோது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியது.

இதனால் கடும் கோபம் அடைந்த கவின் தனது சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார். தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க தீவிர முயற்சி செய்தனர். எனினும் கார் எரிந்து எலும்புக் கூடானது. இது தொடர்பாக காஞ்சிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.