சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அத்துடன், சென்னை ஷெனாய் நகரில் 500 மாணவர்கள் தங்கி பயில வசதியாக, ரூ.40 கோடி மதிப்பீட்டில் போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 24) கூடிய தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தக் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க பல்வேறு கட்சிகள் சட்டசபையில் கோரிக்கை வைத்தனர். பாமக தலைவர் மணி பேசுகையில், ‘‘காமராஜர், எம்ஜிஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அகில இந்திய அளவில் நேரு, இந்திரா பல்கலைக்கழகங்கள் உள்ளன. கருணாநிதி பெயரிலும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்,’‘ என்று கோரினார்.

