சிவகங்கை: பாரம்பரியப் பிரிவின்கீழ் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தைச் சேர்ந்த கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஆன்மிகம், ஆரோக்கியம் உள்ளிட்ட பிரிவின்கீழ் தமிழகத்தில் உள்ள மேல்காலிங்கம்பட்டி சிறந்த சுற்றுலா கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டிக்கான வெற்றியாளர்களை மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிறந்த சுற்றுலா கிராமங்களுக்கான போட்டிக்குப் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 991 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 8 பிரிவுகளின்கீழ் சிறந்த சுற்றுலா கிராமங்களாக 36 கிராமங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

