திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயத்தின் காந்திநகரைச் சேர்ந்த 35 வயதுப் பெண் ஒருவர், தான் பணமோசடிக்கு ஆளாகியிருப்பதாக முன்னதாகப் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகார் குறித்து விசாரிப்பதற்காகக் காந்தி நகர் காவல் நிலையத்திற்குச் சென்றார்.
அப்போது அங்கிருந்த காவல்[Ϟ]துறை துணை ஆய்வாளர் பிஜு, இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமெனில், ரூ.25 ஆயிரம் பணமும் விலை[Ϟ]யுயர்ந்த மதுவும் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.
இதைக்கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த இளம்பெண், பின்னர் மதுபானக் கடைக்குச் சென்று மது வாங்கினார். அதனைப் பெற்றுக்கொண்ட அதிகாரி பிஜு, இளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துத் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தித் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து அந்தப் பெண் கோட்டயம் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று லஞ்ச ஒழிப்புக் காவல்துறையின் அறிவுரையின் பேரில் அந்தப் பெண், மது பாட்டில் மற்றும் ரசாயனப் பொடி தடவிய ரூ.25 ஆயிரம் பணத்துடன் ஓட்டல் அறைக்குச் சென்றார்.
இவரது வருகைக்காகக் காத்திருந்த பிஜு, அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தப் பெண்ணிடமிருந்து பணத்தையும் மதுப்புட்டியையும் பெற்றுக்கொண்டார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், பிஜுவை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.


