தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சசிகலாவை விசாரிக்க அனுமதி

1 mins read
3f57a5cf-eba1-4aef-8a4b-3c6b82be405f
சசிகலா. - படம்: ஊடகம்

சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எதிர்த்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலாவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு தோட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக நீலகிரி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் கைதான தீபு உள்ளிட்ட மூவர் சசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்