தூத்துக்குடி: கந்துவட்டிக் கொடுமையைக் கண்டித்து வழக்கறிஞர் ஒருவர் தலைகீழாகத் தொங்கி நூதன போராட்டம் நடத்தியது தூத்துக்குடியில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
கடம்பூரைச் சேர்ந்தவர் அய்யலுச்சாமி. வழக்கறிஞரான இவர் கந்துவட்டி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கந்துவட்டியால் பல குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகக் கூறி நேற்று வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார் அய்யலுச்சாமி.
கடம்பூர் காட்டுப்பகுதிக்குச் சென்ற அவர் அங்குள்ள புளியமரத்தில் தலைகீழாகத் தொங்கினார். நண்பர்கள் சிலர் அவரது காலில் கயிறுகட்டி, புளிய மரத்தில் தலைகீழாகத் தொடங்கவிட்டனர்.
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அப்படி நின்ற அவர், கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்படும் குடும்பங்களை அடையாளம் கண்டு, மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

