மார்க்சிஸ்ட் கட்சிக்கு வீட்டை எழுதிக்கொடுத்த வழக்கறிஞர்

மார்க்சிஸ்ட் கட்சிக்கு வீட்டை எழுதிக்கொடுத்த வழக்கறிஞர்

1 mins read
9d44139a-bada-49ce-b14c-04f970a72874
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தங்களது வீட்டை மார்க்சிஸ்ட் கட்சிக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர் சென்னையைச் சேர்ந்த தம்பதி இ.கோகுலகிருஷ்ணனும் அவரது மனைவி ஜெயந்தியும். - படம்: இந்து தமிழ்
Google News Preferred Icon

சென்னை: திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதியில் டாக்டர் நடேசன் சாலையில் உள்ள தங்களது மாளிகையை மார்க்சிஸ்ட் கட்சிக்கு எழுதிக்கொடுத்துள்ளார் வழக்கறிஞர் ஒருவர். இதற்கு அவருடைய மனைவியும் முழு மனதாகக் கையெழுத்துப்போட்டு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் இ.கோகுலகிருஷ்ணன் என்பவரும் அவருடைய மனைவி ஜெயந்தியும் சேர்ந்து தங்களது பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்துடன் கூடிய வீட்டை, மத்திய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அன்பளிப்பாகக் கொடுக்க விரும்புவதாக தங்கள் விருப்பத்தை மாநிலக் கட்சிச் செயலாளர் பெ.சண்முகத்திடம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்​டி, தங்​களது வீட்டை முறைப்படி பத்​திரப் பதிவு செய்து, சொத்து தொடர்​பான ஆவணங்​களை மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகத்​திடம் வழக்​கறிஞர் கோகுல​கிருஷ்ணன் ஒப்​படைத்​தார்.

குடும்​பச் சொத்தை கட்​சிப் பணிக்​காக வழங்​கிய தம்​ப​தி​யருக்கு பெ.சண்​முகம் நன்​றி​யும், பாராட்​டும் தெரி​வித்​தார். மத்​திய சென்னை மாவட்​டச் செய​லா​ளர் ஜி.செல்வா, சால்வை அணி​வித்து கௌர​வித்​தார்.

வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணனும் அவரது மனைவி ஜி.ஜெயந்தி ஆகிய இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளாலும், ஏழை எளிய மக்களுக்கான களப்பணிகளாலும் ஈர்க்கப்பட்டவர்கள்.

தங்களின் வாழ்நாள் உழைப்பில் சேர்த்த சொத்து, ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்கான போராட்டங்களுக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் பயன்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில் அவர்கள் தங்கள் வீட்டைக் கொடையளித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்