தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்

1 mins read
845100bb-eb64-4faa-865f-203f32afb67c
வெட்டுக்காயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - படம்: தமிழக ஊடகம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணனை ஆடவர் ஒருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் வெட்டுக்காயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஓசூரில் வியாழக்கிழமை (நவம்பர் 21) வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்துக்கு முன்பு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆனந்தகுமார் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் நவம்பர் 21ஆம் தேதி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்