சென்னை: வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போடியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
“அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தைத் தொடரமாட்டேன். என் பயணம் என் கால்களை நம்பித்தான். என்னைத்தான் எல்லாரும் பின்பற்றுகிறார்கள், நான் செய்வதையே அனைவரும் செய்கிறார்கள். என்னுடைய கொள்கை யாருடனும் ஒத்துப்போகாது,” என்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறினார்.
நிலத்தை நாசமாக்கும் நச்சு ஆலைகளைத் திணித்தன இந்தியக் கட்சிகள், அதை அனுமதித்தன திராவிடக் கட்சிகள். திராவிடக் கட்சியினர் போட்டி போட்டு ஊழலில் ஈடுபடுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

