போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்: ஸ்டாலின்

1 mins read
f008c54a-262a-4ec3-b484-b0a3685bdb38
முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என உலக அகதிகள் தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்.

“நடப்பு திமுக ஆட்சியில், ‘அகதிகள் முகாம்’ என்பதை ‘மறுவாழ்வு முகாம்’ எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம். வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்,” என முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்