தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில்மீது கல்லெறிந்தால் ஆயுள் தண்டனை

2 mins read
6da1d596-c0d3-4abb-801d-9d6aa5e0b481
ரயில்மீது கல் வீசுவது உறுதி செய்யப்பட்டால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ரயிலுக்கு ஏற்பட்ட சேதத்திற்குச் சமமான தொகை அவர்களிடம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: ரயில்கள் மீது கல்லெறியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், ரயில்வே துறையின் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இனி ரயில் மீது கல்லெறிபவர்களுக்கு ரயில்வே சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுச் சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்​வே​யின் பல்​வேறு வழித்​தடங்​களில் விரைவு, பயணிகள் ரயில் மற்​றும் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​பட்டு வருகின்றன. ரயில்கள் மீது கல்லெறியும் ஆபத்தான சம்பவங்கள் நிகழா வகையில் ரயில்வே காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ரயில் மீது கல் வீசுவது உறுதி செய்யப்பட்டால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ரயிலுக்கு ஏற்பட்ட சேதத்திற்குச் சமமான தொகை அவர்களிடம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கண்​ணூர் விரைவு ரயில்மீது கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்த கல்வீச்சு சம்​பவம் தொடர்​பாக எர்​ணாகுளம் ரயில்வே காவல்துறை இரண்டு பேரைக் கைது செய்​தது.

பயணி​கள், ரயில்வே துறை பணி​யாளர்​கள் மற்​றும் ரயில் நடவடிக்​கை​களின் பாது​காப்​புக்கு கடுமை​யான அச்சுறுத்​தலை ஏற்​படுத்​து​வ​தால், இதுபோன்ற நாச வேலைகளில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறது இந்திய ரயில்வே துறை.

இது போன்ற குற்​றச்​செயல்​களில் ஈடு​படு​ம் குற்றவாளிகளை் ரயில்வே சட்​டத்​தின் கீழ் பிணையில் விடுதலையாக்க முடியாது.

பயணிகள் அல்லது ஊழியர்களின் பாது​காப்​புக்கு ஆபத்து ஏற்​படுத்​தும் நோக்​கத்​துடன் செயல்​படு​பவர்​களுக்கு ஆயுள் தண்​டனை அல்​லது 10 ஆண்​டு​கள் வரை சிறைத் தண்​டனை​யும் விதிக்கப்படலாம்.

முதல்​முறை குற்​றம் ​புரிந்​தவ​ராக இருந்​தால் குறைந்​த​பட்​சம் மூன்று ஆண்​டு​கள் சிறையும் மறுமுறை அக்குற்றத்தைச் செய்வோர் குறைந்​த​பட்​சம் ஏழு ஆண்​டு​கள் சிறைத் தண்​டனையும் அனுபவிக்க நேரிடும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்