​தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாள்கள் மதுக்கடைகள் மூடல்

​தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாள்கள் மதுக்கடைகள் மூடல்

1 mins read
b789934c-4a88-4e87-9760-5c7153940b40
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். - கோப்புப்படம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் மதுக்கடைகளை நான்கு நாள்களுக்கு மூடத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியும் இதில் அடங்கும்.

தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்​தில் தேர்தலையொட்டி நான்கு நாள்​கள் மதுக்​கடைகள் மூடப்​படும் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சுதந்திரமாகவும் அமைதியாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ஆம் தேதி, அதற்கு முன்பு 21, 22 ஆகிய இரு நாள்கள் என மூன்று நாள்கள் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குப்பதிவன்று வாக்காளர்களுக்கு மது கொடுத்து வாக்குகளைப் பெற வாய்ப்புண்டு எனக் கருதுவதாலும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் எழக்கூடும் என்பதாலும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்