ரூ.1 கோடி பரிசுடன் உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது அறிவிப்பு

ரூ.1 கோடி பரிசுடன் உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது அறிவிப்பு

1 mins read
b9baf806-e4ec-4e4c-aa90-da668791766e
எழுத்தாளர் ஜெயமோகன். - படம்: தினமலர்

சென்னை: ‘உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது’ என்ற பெயரில், இனி ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்படும் என எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள அவர், நியூயார்க்கில் இருந்தபடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘தமிழில் நவீன இலக்கியம்’ என்பதற்கு இடமுண்டா என்று பிறமொழிக்காரர்கள் பலர் தம்மிடம் கேட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்ப் படைப்பாளிகளை மதிப்பீடு செய்ய இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“இவர்களது அங்கீகாரத்தைப் பெற ஏன் முண்டியடிக்கிறோம். இத்தனை சூழ்ச்சிகளுக்குப் பிறகும் இவ்வாறு செய்திட நினைத்தால் மனம் கூசுகிறது.

“எனவே, இந்திய வரலாற்றின் ஆகப்பெரிய இலக்கிய விருதை நாங்கள் அறிவிக்கிறோம்,” என்றார் ஜெயமோகன்.

உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்கான ‘உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது’ என்ற பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், டெல்லியிலும் நியூயார்க் நகரிலும் ஆண்டுதோறும் விருது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயமோகன்.

இது தமிழ்ப் படைப்புலகில் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்