விஜய்யை விமர்சிக்காதது பற்றி மு.க. ஸ்டாலின் விளக்கம்

விஜய்யை விமர்சிக்காதது பற்றி மு.க. ஸ்டாலின் விளக்கம்

1 mins read
1569f692-b3ad-466d-ad33-8bf2a40c30a9
யாரையும் கடுமையாக விமர்சிப்பதில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். - படம்: தினத்தந்தி

சென்னை: பிரதான கட்சிகளாக இருக்கக்கூடிய திமுகவும் அதிமுகவும் இரண்டு கட்சிகளுக்கு மட்டும்தான் போட்டி என்றுகூறி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைத் தவிர்த்து வருகின்றன.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜய் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த ஒரு விமர்சனமும் செய்யாமல் தவிர்த்து வந்தார். அதுபற்றி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் விளக்கி உள்ளார்.

“எடப்பாடி பழனிசாமியை நீங்கள் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். ஆனால் இந்தத் தேர்தலில் விஜய் உங்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்கிறார். அதற்கு நீங்கள் பதில் அளிக்காமல் தவிர்க்கிறீர்களே?,” என்று ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “நான் எடப்பாடி பழனிசாமியைக்கூட கடுமையாக விமர்சிப்பது இல்லை.

“அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால், தேவையான கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் மட்டுமே பதில் அளித்து வருகிறேன்.

“தனிப்பட்ட முறையில் கடுமையான விமர்சனங்களை நான் செய்யவில்லை.

“அதேபோல விஜய் குறித்து நீங்கள் கேட்கிறீர்கள். திமுகவைப் பொறுத்தவரை, புதியதாக அரசியலுக்கு வருபவர்கள் அல்லது புதிய கட்சியைத் தொடங்குபவர்கள் பெரும்பாலும் திமுகவை விமர்சிப்பது வழக்கமாக உள்ளது.

“இதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். திமுக அதைப் பற்றி அதிகமாகக் கவலைப்படவில்லை.

“சிலர் திமுகவை விமர்சித்தால்தான் அரசியலில் முன்னேற முடியும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. திமுக என்பது ஒரு வளர்ச்சி சக்தி.

“தமிழ்நாட்டில் பல தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாக இருந்தது திமுக ஆட்சிதான்,” என்றார் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்