மு.மேத்தா, பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது

மு.மேத்தா, பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது

1 mins read
ae1952b3-0862-486f-bc0c-98d7dbaa046d
பாடகி பி.சுசீலா (இடது), கவிஞர் மு. மேத்தா. - படம்: ஊடகம்

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நினைவினைச் சிறப்பிக்கும்வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழக அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது கவிஞர் மு. மேத்தாவுக்கும் பின்னணிப் பாடகி பி. சுசீலாவுக்கும் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தது.

மேலும், இவ்விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 4ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் வழங்கினார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பு கூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்