மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமானப்பணி 90% நிறைவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமானப்பணி 90% நிறைவு

1 mins read
8368ac8a-9acd-4982-adf1-afbcab9ec774
கடந்த 2024ஆம் ஆண்டு மே மாத இறுதியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருந்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் 90 விழுக்காடு நிறைவடைந்துள்ளன.

மருத்துவக் கல்லூரிக்கான வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் உள்ளிட்ட முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வரும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் மருத்துவக் கல்லூரி வளாகம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படுமென ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அங்கு இரவு பகலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2024ஆம் ஆண்டு மே மாத இறுதியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருந்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் நாட்டின் ஜெய்கா (Jaica) நிறுவனத்தின் உதவியோடு எய்ம்ஸ் மருத்துவமனை உருவாகிறது. மொத்த திட்டப்பணிகளும் 33 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2027 பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் முடிவுக்கு வருமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மொத்தம் 900 படுக்கை வசதிகள் இருக்கும். இதில் தொற்று நோய் சிகிச்சைக்காக 150 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், 750 இருக்கைகள் கொண்ட நவீனக் கூட்ட அரங்கம், விளையாட்டுத் திடல், மாணவர் விடுதிகள், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கான பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன.

இதையடுத்து, மருத்துவ மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்