மதுரை விமான நிலையம் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி

1 mins read
c6229562-477c-493a-b292-c01a5c38a995
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க அனுமதி. - கோப்புப் படம்: இணையம்

மதுரை விமான நிலையம் 24 மணிநேரமும் செயல்பட இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

வரும் அக்டோபர் மாதம் முதல் இரவு நேரங்களில் மதுரை விமான நிலையத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு காலை 6.55 மணிக்கு முதல் விமானமும் இரவு 9.25-க்கு கடைசி விமானமும் இயக்கப்படுகிறது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுடன் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மதுரை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவதற்காக இண்டிகோ, இந்தியன் ஏர்லைன்ஸ், ஆகாசா ஏர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களிடம் இரவு நேர விமானங்களின் நேரப் பட்டியலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கோரியுள்ளது.

குறிப்புச் சொற்கள்