மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணிவரை கோவில் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வருகையளிக்க தொடங்கிவிட்டனர். அக்னி தீர்த்த கடல், கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் பலர் நீராடினர். இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இன்று சனி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வந்துள்ளதால் மிகச் சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்க கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.