சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் நினைவாக ‘கருணாநிதி நூலகம்’ என்ற மாபெரும் நூலகத்தை மதுரையில் அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டு இந்நூலகத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அந்த வகையில், அண்மையில் நடந்த சட்டசபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, தற்போது திருச்சியில் 4.57 ஏக்கர் பரப்பளவில் 7 தளங்கள் கொண்ட மாபெரும் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

