மொரதாபாத்: குரங்குகளை நோக்கி வீசிய கோடரி சொந்தப் பிள்ளையைத் தாக்கியதில் அந்த இரண்டு வயது ஆண்பிள்ளை இறந்துபோனது.
அந்த சோகச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொரதாபாத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நிகழ்ந்தது.
மொரதாபாத்தில் உள்ள லக்கன் சிங் என்பவரின் வீட்டில் அவரது இரண்டு வயது மகன் ஆரவ் விளையாடிக் கொண்டு இருந்தான்.
அப்போது குரங்குக் கூட்டம் ஒன்று வீட்டுக்குள் நுழைவதை லக்கன் சிங் கண்டார்.
தமது குழந்தையை குரங்குகள் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் அவற்றைத் துரத்த அவர் முயன்றார்.
வீட்டின் கூரையில் ஏறிய லக்கன் சிங், கோடரி ஒன்றை மேலிருந்து வீட்டுக்குள் இருந்த குரங்குகளை நோக்கி வீசினார்.
அப்போது துரதிருஷ்டவசமாக குழந்தையின் கழுத்தில் கோடரி பாய்ந்தது.
பதறித் துடித்துப்போன லக்கன் சிங்கும் அவரது குடும்பத்தாரும் உடனடியாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடினார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
மருத்துவமனையில் இருந்து நேராக மயானம் சென்ற குடும்பத்தினர், காவல்துறையிடம் எதுவும் தெரிவிக்காமலேயே குழந்தையை அங்கு புதைத்தனர்.
அந்தச் சம்பவம், அவர்களின் உறவினர்களிடையே சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது.