தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாம்சுங் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணி நீக்கம் செய்வோம் என நிர்வாகம் எச்சரிக்கை

1 mins read
d58a8085-54a6-4808-8ace-7c8a862ea166
தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சுங் ஊழியர்கள். - படம்: இந்திய ஊடகம்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இயங்கும் சாம்சுங் தொழிற்சாலையில் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊதிய உயர்வு, ஊக்கத் தொகை, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சாம்சுங் நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்குச் செப்டம்பர் 20ஆம் தேதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

“ஊழியர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது. போராட்டத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும்,” என இதுதொடர்பாக சாம்சுங் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், “பணிக்குத் திரும்ப விரும்பும் ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஏற்கனவே ஊழியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 3 நாள்களுக்குள் (செப்டம்பர் 24) ஊழியர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் செய்ய நேரிடும்,” என்று ஊழியர்களை சாம்சுங் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ஊழியர்களுக்கும் சாம்சுங் நிர்வாகத்திற்கும் இடையில் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்