தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

50 ஆண்டுகள் சேவையாற்றிய கோவில் யானைக்கு மணி மண்டபம்

1 mins read
93e2c173-01d5-46a2-86b3-e474bbcbb72c
பவானி யானை 12 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 62வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானது. - படம்: ஊடகம்

ராமேசுவரம்: ராமேசுவரம் கோவில் யானைக்கு தமிழக அறநிலையத் துறை சார்பாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள ராமநாதசுவாமி கோவிலில் இருந்த பவானி என்ற யானை 12 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 62வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானது.

இதையடுத்து, 50 ஆண்டுகளாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த பவானி யானை, கோவிலுக்குச் சொந்தமான தோப்பிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

பின்னர் பவானி யானைக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது.

அதன்படி, பவானி யானை இறந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன் சேவையை பக்தர்கள் நினைவுகூறும் வகையில், மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இது மிக விரைவில் திறந்து வைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்