குண்டர் கும்பல் கட்டுப்பாட்டில் மெரினா கடைகள்: சாடிய நீதிபதிகள்

குண்டர் கும்பல் கட்டுப்பாட்டில் மெரினா கடைகள்: சாடிய நீதிபதிகள்

1 mins read
377def61-438c-4f0f-b1f4-5b46d9a522dd
மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கடைகள். - கோப்புப்படம்: இந்து தமிழ் திசை

சென்னை: மெரினா கடற்கரையில் இயங்கிவந்த பல கடைகள் இதுநாள் வரை குண்டர் கும்பல்களின் (மாஃபியா) கட்டுப்பாட்டில் இருந்ததாக சென்னை உயர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டி உள்ளது.

கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்தக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை, இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.

அப்போது, மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை (மார்ச் 4) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மெரினாவை வியாபாரத் தலமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

கேரளா​வின் கோவளம், ஒடி​சா​வின் பூரி, மும்பை மெரைன் டிரைவ் போன்ற கடற்​கரைகளைப்​போல் மெரினாவையும் அழகுபடுத்தி சுத்​த​மாகப் பராமரித்​தால் மட்​டுமே இந்​தியச் சுற்​றுலாப் பயணி​கள் மட்​டுமின்றி வெளி​நாட்டுச் சுற்​றுலாப் பயணி​களும் அதி​க அள​வில் வருகை தரு​வர் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

“நீதி​மன்​றம் தலை​யிடும் முன்​பாக, மெரினா கடற்​கரை முழு​மை​யாக கடைகளால் ஆக்​கிரமிக்​கப்​பட்டு சுத்​தமில்​லாமல் இருந்​தது. அந்தக் கடைகள் குண்டர் கும்​பல்​களின் கட்​டுப்​பாட்​டில் இருந்​தன. கடை உரிமை​யாளர்​களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்த அந்தக் கும்​பல் நீதி​மன்றத் தலை​யீடு காரண​மாக பின்​புலத்​தில் இருந்து கொண்டு சிலரைத் தூண்​டி​விடு​கிறது.

“கடைகளை முறைப்​படுத்​தும் நீதி​மன்ற நடவடிக்​கைகளுக்கு எதிர்ப்புத் தெரி​வித்​தால் அழகான மெரினாவை எதிர்​காலச் சந்​த​தி​யினருக்கு விட்​டுச்​செல்ல முடி​யாது,” என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்