71 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

71 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

1 mins read
1dc6799b-c647-4236-8cdb-c6f930656b95
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதி அறிக்கையை ஏப்ரல் 6ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டது.  - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்பது 71 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதி அறிக்கையை ஏப்ரல் 6ஆம் தேதி வெளியிட்டார்.

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் காலக்கெடு நிர்ணயித்தல், பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குதல், அரசியல் கட்சிகள் பெருநிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவதைத் தடை செய்தல் போன்றவை முக்கிய அம்சங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றன.

மேலும், அனைத்துத் துறைகளிலும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 26,000, 100 நாள் வேலைத் திட்டக் கூலியை ரூ.700 ஆக உயர்த்தி 200 நாள்களாக விரிவாக்குதல், விவசாய ஊழியர்களுக்கு ரூ. 5,000 ஓய்வூதியம் போன்றவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

வேளாண் விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 விழுக்காடு கூடுதல் விலை வழங்க மத்திய அரசை வலியுறுத்தவும் கோயில், வக்பு நிலங்களில் வசிப்போருக்குப் பட்டா வழங்கவும் அந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சத்துணவுத் திட்டத்தில் அசைவ உணவுகள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை, புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் உள்ளிட்ட 71 வாக்குறுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்