இறைச்சித் துண்டுக்காக திருமண வீட்டில் சரமாரி தாக்குதல்

1 mins read
7ffe6f43-eb01-4c57-b522-a56f1bcd832a
இறைச்சிக் கறி. - படம்: ஊடகம்

நிஜாமாபாத்: திருமண விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் ஆட்டிறைச்சித் துண்டுகள் இல்லாததால் மணமக்களின் உறவினர்கள் தகராற்றில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், நவிபேட் பகுதியில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

திருமணத்திற்குப் பிந்திய கொண்டாட்டத்தின்போது மணமகனின் உறவினர்கள் குறைந்த அளவு ஆட்டிறைச்சித் துண்டுகள் வழங்கப்படுவதாகக் குறைகூறினர்.

இது மணமகள் மற்றும் மணமகன் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதமாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் சமையல் கரண்டி, கற்கள், கட்டைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த எட்டுப் பேரைச் சிகிச்சைக்காக நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குறிப்புச் சொற்கள்