மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு

மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு

2 mins read
7103922c-535f-49cc-b697-cb7afc4eb91b
மீனாட்சி நடராஜன். - கோப்புப் படம்: தினமணி

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட இருந்த மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், காங்​கிரஸ் கட்சி சார்​பில் போட்டியிட இருந்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சிக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மாநிலங்களவையில் காலி​யாக உள்ள 27 இடங்​களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் மத்​தியப் பிரதேசத்​திலிருந்து மூன்று இடங்​களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அம்மாநிலச் சட்டமன்றத்தில் 230 உறுப்​பினர்​ உள்ளனர். ஒரு வேட்​பாளர் வெற்றி பெற 58 வாக்​கு​கள் தேவை.

பாஜக​விடம் 164, காங்​கிரசிடம் 64 எம்​எல்​ஏக்​கள் உள்​ளனர். இதனால் பாஜக சார்பாக இருவரும் காங்​கிரஸ் சார்பாக ஒருவரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

பாஜக பொதுச் ​செய​லா​ளர் தருண் சக், மாநிலச் செய​லா​ளர் ரஜ்னீஷ் அகர்​வால் ஆகியோர் வேட்​பாள​ர்களாக உள்​ளனர்.

பாஜக​விடம் 48 வாக்​கு​கள் உபரி​யாக இருப்​ப​தால் மூன்றாவது வேட்​பாளர் அறிவிக்​கப்​பட்டார்.

அதேபோல் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் காங்கிரஸ் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

எனினும், ஹைத​ரா​பாத் நீதி​மன்​றத்​தில் தன்மீது நிலுவையில் உள்ள ஒரு குற்ற வழக்கு விசாரணை குறித்த விவரத்தை மீனாட்சி நடராஜன் குறிப்​பிடாத​தால் அவரது வேட்​புமனு நிராகரிக்​கப்​பட்​டது.

“முன்பு மத்தியப் பிரதேசத்தில் தேர்தல்களைச் சீர்குலைத்தது போலவே, இப்போதும் மாநிலங்களவை தேர்தலைத் தங்களுக்குச் சாதகமாக வளைக்க பாஜகவினர் வெளிப்படையாக முயற்சி செய்கின்றனர்,” என்று மீனாட்சி நடராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மாநிலங்களவைதேர்தல்காங்கிரஸ்மீனாட்சி