இந்தியாவில் முதன்முறையாக வணிக வளாகத்துக்குள் மெட்ரோ ரயில் பாதை

1 mins read
ef4a22bf-3ed6-4b7f-b2d4-f4a8e5ced8a0
திருமங்கலம் ரயில் நிலையத்துடன் கூடிய ஒன்பது மாடிக் கட்டடத்தின் மாதிரிப் படம். - படம்: ஊடகம்

சென்னை: இந்தியாவில் முதன்முறையாக ஒரு வணிக வளாகத்துக்கு உள்ளே சென்று வெளியேறும் வகையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்காக ஒன்பது மாடி வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.

இந்தக் கட்டடத்துக்குள் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும்.

சென்னையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மாநகரின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்படுகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனது சேவையைத் தொடங்கி, ஜூன் 29ஆம் தேதியுடன் பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், அந்நிறுவனம் புதிய சாதனைக்குத் தயாராகிறது.

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துக்காக ஒன்பது மாடிகள் கொண்ட கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இவற்றின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளங்களில் மெட்ரோ ரயிலுக்கான பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

மொத்தம் 6.85 லட்சம் சதுர அடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியாவில் முதன்முறையாக வணிக வளாகத்துக்குள் சென்று, வெளியேறும் மெட்ரோ ரயில் பாதை, சென்னையில்தான் அமைய உள்ளது.

இதையடுத்து, இத்திட்டத்தின் மாதிரி வரைபடம் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்