சென்னை: மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

சென்னை: மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

1 mins read
52eef55d-d2c1-4a1b-9c6b-349514a0937a
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள், படம்: பிடிஐ -
Google News Preferred Icon

கொவிட்-19 கிருமிப்பரவல் காரணமாக தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்ட சென்னையின் மெட்ரோ ரயில் சேவை ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது.

காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் 5 நிமிட இடைவெளியில் ஒரு சேவையும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளிக்கு ஒரு சேவையும் வழங்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி தடை செய்யப்பட்டுள்ளது. .

குறைந்த அளவிலான மக்களே பயணம் செய்து வருகிறார்கள்.

சேவை தொடங்கிய முதல் நாளில் 29 ஆயிரம் பேர் பயணித்தனர்.

நேற்று இந்த எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இன்று 3வது நாளாக சேவை நீடிக்கிறது. படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்காணிக்க தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.