பிணையில் வெளியான மறுநாளே அமைச்சர் பதவி: செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

1 mins read
2a2ec81a-2a8f-477f-8584-0e135176da8a
மனு நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு திங்கட்கிழமை (டிசம்பர் 2) விசாரணைக்கு வந்தது. - கோப்புப் படங்கள்

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி அண்மையில் பிணையில் வெளியே வந்தார். அவர் பிணையில் வெளியே வந்த ஓரிரு நாள்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியான மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகளே வழங்கப்பட்டன.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை மனுவை எதிர்த்து வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு திங்கட்கிழமை (டிசம்பர் 2) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி ஓகா, “மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது. பல வழக்குகள் நிலுவையில் உள்ளபோது அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும்? நாங்கள் பிணை கொடுத்த அடுத்த நாளே நீங்கள் அமைச்சராகப் பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது? என்னதான் நடக்கிறது. குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் அமைச்சரானால் வழக்கின் சாட்சிகள் பயப்படுவார்கள். பிணை கிடைத்தவுடன் அமைச்சராகும் விவகாரம் மிக தீவிரமான விஷயம் என்பதால் அதனை தீவிரமாகக் கருதுகிறோம்,” என நீதிபதி அபே ஓகா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த விளக்கத்தைப் பிரமாண பத்திரமாக அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

குறிப்புச் சொற்கள்