சென்னை: தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறையின் சோதனை முடிந்துள்ளது.
செவ்வாய்க் கிழமை கே.என். ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
ஐந்து கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து விசாரணை நடைபெற்றது.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் மூன்று நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
ஐந்து கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.

