புதுக்கோட்டை: தமிழகத்தில் குண்டர் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“தேவையின்றி யார் மீதும் வேண்டுமென்றே இந்தச் சட்டத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்துவது இல்லை,” என்றார் அமைச்சர் ரகுபதி.
நடப்பு திமுக ஆட்சியில் அரசை எதிர்த்துப் பேசுவோர் மீது வேண்டுமென்றே குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், அமைச்சர் ரகுபதி இக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

