அமைச்சர்களின் கைப்பேசி எண், மின்னஞ்சல் விவரங்கள் வெளியிடப்பட்டன

அமைச்சர்களின் கைப்பேசி எண், மின்னஞ்சல் விவரங்கள் வெளியிடப்பட்டன

கோப்புப் படம்: தினமணி

21 Jun 2026 - 5:38 pm

1 mins read

சென்னை: தமிழக அமைச்சர்களின் கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய்யின் மின்னஞ்சல் முகவரி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக அமைச்சர்களின் வீடு, அலுவலகங்கள், அவர்களின் துறைசார்ந்த அதிகாரிகளின் தொடர்பு எண்கள், மற்ற முக்கியமான அரசு விவரங்கள் அடங்கிய கையேடு ஒன்று ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பாக தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.

அந்த வகையில், நடப்பாண்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், முதல்வர் விஜய்யின் mlaperambur@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி இடம்பெற்றுள்ளது.

மேலும், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ், வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரது விவரங்களும் வெளியாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்
அமைச்சரவைஅமைச்சர்முதல்வர்விஜய்மின்னஞ்சல்அலுவலகம்