சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 100க்கும் அதிகமான இடங்களில் தவெகவின் வெற்றி உறுதியாகியுள்ள சூழலில் பல்வேறு தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் மிகச் சிறப்பான முறையில் வெற்றி பெற்றிருக்கும் தவெகவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, விஜய்க்குத் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து, ஏறத்தாழ 15 நிமிடங்கள் உரையாடியதாகக் கூறப்படுகிறது.
மேலும், இளையர்களின் குரலை யாரும் தடுக்கக்கூடாது என்றும் யாராலும் தடுத்துவிடவும் முடியாது என்றும் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக திரு ராகுல் கூறியதாகத் தெரிகிறது.
எதிர்முகாமைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களில், விஜய்க்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது திரு ராகுல்தான் எனத் தமிழக ஊடகச் செய்தி தெரிவித்தது.
ஏற்கெனவே கரூர் துயரச் சம்பவத்தின்போதும் விஜய்யைத் தொடர்புகொண்டு பேசியிருந்தார் அவர்.

