சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி, ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரெஸ்லி ஷெகினா என்ற சிறுமி 800 கிலோ சிறுதானியங்களைப் பயன்படுத்தி பிரதமரின் படத்தை வரைந்து உலக சாதனை புரிந்துள்ளார்.
சுமார் 600 சதுர அடி பரப்பில் பிரதமர் மோடியின் படம் வரையப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 12 மணி நேரங்களுக்குத் தொடர்ந்து வரைந்து, உலகின் ஆகப் பெரிய தானிய ஓவியத்தை உருவாக்கி, பிரெஸ்லி ஷெகினா சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரதாப் செல்வம், சங்கீரணி தம்பதியரின் மகளான 13 வயது பிரெஸ்லி, தற்போது 8ஆம் வகுப்பு படிக்கிறார்.
காலை 8 மணிக்குத் தொடங்கி, இரவு 8.30க்குள் ஓவியத்தை உருவாக்கினாராம். உலக சாதனை படைத்த அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

