சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20ஆம் தேதி செல்ல செல்ல இருப்பதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
பிரதமராகப் பொறுப்பேற்றதும் தமது முதல் பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இத்தாலி சென்றுள்ளார்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காக வரும் 20ஆம் தேதி திரு மோடி சென்னை செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மோடி சென்னை செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

