சென்னை: தமிழகத்தில் இருக்கும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான பணிகள் விரைவாக நடந்துவரும் நிலையில், அதிகாரபூர்வமாக அத்திட்ட விரிவாக்கத்தை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதன்மூலம், கூடுதலாக 3.50 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.
2022ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் இத்திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைக்கவே அதை முன்மாதிரியாகக் கொண்டு பல மாநிலங்களிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.