தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் நா.முருகானந்தம்

1 mins read
aaec2c7e-7106-43cd-881a-5d26e2d31dee
தமிழக அரசின் 50வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி நா.முருகானந்தம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) பொறுப்பேற்றுக்கொண்டார்.

தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்ட நிலையில் அவருக்குப் பதில் சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர், முதல்வரின் தனிச் செயலாளராக முருகானந்தம் பணியாற்றியிருந்தார்.

இதற்கிடையே, சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2023 ஜூன் 30ஆம் தேதி பதவியேற்ற சிவ்தாஸ் மீனா ஓராண்டுக்கும் மேலாக தலைமைச் செயலாளர் பதவியில் இருந்தார்.

தமிழக அரசின் 50வது தலைமைச் செயலாளரான முருகானந்தம், சென்னையைச் சேர்ந்தவர். பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான இவர் 1991ல் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்று பணியில் சோ்ந்தார்.

2001 முதல் 2004 வரை கோவை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய முருகானந்தம், ஊரக வளா்ச்சித் துறையின் இணைச் செயலாளர், புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர், தொழில்துறை, நிதித் துறைகளின் செயலாளர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் முதல்வரின் தனிப் பிரிவுச் செயலாளராக பணியில் இருந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

குறிப்புச் சொற்கள்