சென்னை: திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வரும் மார்ச் மாதம் முதல் புதிய விமானச் சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்கள் மிக எளிதாக, குறைந்த கட்டணத்தில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திருச்சியில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவிற்கு தினமும் இரண்டு முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தச் சேவைகளுக்கான கட்டணம் சற்று அதிகம்.
பிற்பகல் 12.55 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் விமானம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். பின்னர் அது பிற்பகல் 2.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி வந்தடையும்.