சென்னை: குடிநீர் குறித்த புகார்களைப் பதிவுசெய்ய புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இடம், புகைப்படத்துடன் புகார் கூறினால் உரிய நேரத்தில் கோரிக்கைகள் உதவிப் பொறியாளர் மூலம் தீர்த்துவைக்கப்படும். இல்லையெனில், 48 மணிநேரத்தில் புகாரளிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார் என்று தினமணி ஊடகம் தெரிவித்தது.
“சென்னை குடிநீர் செயலி’ எனும் புதிய செயலி அறிமுகம்!
“புகைப்படம் மற்றும் இடத்தை (location) இணைத்துப் புகார் தெரிவித்தால், உரிய காலத்தில் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு!
“இல்லையெனில், 48 மணிநேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,” என்று அப்பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.