புதிய ஆளுநர் மார்ச் 12ல் பதவியேற்பு

புதிய ஆளுநர் மார்ச் 12ல் பதவியேற்பு

1 mins read
d627ea72-8f9a-4d0c-844d-24c867d8c388
தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்கவிருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர். - படம்: சூர்யா சஞ்சிகை

சென்னை: தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகா் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 12ஆம் தேதி அவர் பதவியேற்கவிருக்கிறார்.

கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கு தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து கேரள ஆளுநா் ஆர்.வி. ஆர்லேகா் தமிழக ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா் என கடந்த மாா்ச் 5ஆம் தேதி இந்திய அதிபர் உத்தரவிட்டாா்.

இதை முன்னிட்டு ஆா்.வி.ஆர்லேகா் வரும் 11ஆம் தேதி சென்னை வருகிறாா்.

அதே நாளில் கடந்த நாலரை ஆண்டுகளாக தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கோல்கத்தாவுக்குச் செல்கிறாா்.

அவரை ஆளுநா் மாளிகை அதிகாரிகளும் ஊழியா்களும் வழியனுப்பி வைக்கின்றனா்.

தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆர்.வி.ஆர்லேகா் மாா்ச் 12-ஆம் தேதி முற்பகல் சுமாா் 12 மணியளவில் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயா்நீதி மன்றத் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்