தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: புயலுக்கு மோன்தா எனப் பெயர் சூட்டிய தாய்லாந்து

2 mins read
b52cb730-c0c8-4d1d-9670-102bef15bc78
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து தெற்கு கர்நாடகப் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள வானிலை மையம், தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும் புதுவையிலும் சனிக்கிழமை (அக்டோபர் 25) இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 29ஆம் தேதி வரை இந்த மழை நீடிக்க வாய்ப்புண்டு. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருகிற 27ஆம் தேதி வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இந்தப் புயலானது ஆந்திரா நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் சென்னையில் கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஒருவேளை புயல் உருவானால் அதற்கு தாய்லாந்து பரிந்துரைத்த ‘மோன்தா’ (Montha) என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறைப்படி, அந்தந்த வட்டாரங்களில் உருவாகும் புயல்களுக்கு சுழற்சி முறையில் நாடுகள் பெயர்களைப் பரிந்துரைக்கின்றன.

குறிப்புச் சொற்கள்