அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்புறுதி

அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்புறுதி

1 mins read
97628218-66f1-450f-a5c4-9565119a2690
புதிய திட்டம் ஜூலை முதல் தேதியிலிருந்து 2031ஆம் ஆண்டு ஜூன் 30 வரை 5 ஆண்டுகள் நடப்பில் இருக்கும். - கோப்புப் படம்: இடிவி பாரத்
Google News Preferred Icon

சென்னை: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவக் காப்புறுதித் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிய திட்டம் ஜூலை முதல் தேதியிலிருந்து 2031ஆம் ஆண்டு ஜூன் 30 வரை 5 ஆண்டுகள் நடப்பில் இருக்கும்.

இத்திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமின்றி ரூ.7.50 லட்சம் வரை மருத்துவ உதவி பெறலாம். 46 வகையான தீவிர நோய்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் வரை சிகிச்சை வசதி வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக கார்ப்பஸ் நிதி மூலம் ரூ.15 லட்சம் வரை உதவி கிடைப்பதால், மொத்தம் ரூ.27 லட்சம் வரை மருத்துவ உதவி பெற முடியும்.

இந்த திட்டத்தில் 2,992 சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1,535 தனியார் மருத்துவமனைகளும் அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டோரும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறைந்த ஊதியம் பெறுவோருக்கான சந்தாவை அரசே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காப்புறுதித் திட்டத்தின்கீழ் ரூ.27 லட்சம் வரை மருத்துவ உதவி பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுதமிழகம்காப்புறுதிஅரசுப்பணிஊழியர்கள்சந்தா