த.வெ.க. மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள்

1 mins read
ef1fd984-3b4f-426e-80b3-e5df1afcf3a5
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் (தவெக) அடுத்த சட்டசபைத் தேர்தலை நோக்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், கட்சியின் உட்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

சரவணன் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக விஷ்ணு, ரவி, அருண் பிரசாத், நரேஷ், அரவிந்த், பிரிதீங்கா, கார்த்திக், சித்தர் பாண்டியன், மணிமேகலை, ஹரி, ஜெகதா, சினோரா பி.எஸ். மோஹித், தமிழினியன், விவேக் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“கழக மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் கழகத்தின் ஆக்கபூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த்தின் வழிகாட்டுதலின்படி, கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்