இடுக்குப் பிள்ளையார் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள்

இடுக்குப் பிள்ளையார் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள்

1 mins read
daa6066f-6344-495b-9973-807cf88d80fd
திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் உள்ளது இடுக்குப் பிள்ளையார் கோவில். அங்குள்ள குறுகிய குகைப் பாதை வழியே நுழைந்து, வெளியேறி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். - கோப்புப் படம்: தினத்தந்தி
multi-img1 of 2

திருவண்ணாமலை: புகழ்பெற்ற இடுக்குப் பிள்ளையார் கோவிலில் பக்தர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து புதிய நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றும் குகைக் கோவிலுக்கு அருகே, உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனுமதி இல்லை எனக் குறிப்பிட்டு ஒரு பதாகை வைத்துள்ளனர்.

மேலும், இத்தகைய விவகாரங்களைக் கவனிக்க கோவில் நிர்வாகம் புதிதாக இரண்டு பணியாளர்களை நியமித்துள்ளது.

திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் உள்ளது இடுக்குப் பிள்ளையார் கோவில். அங்குள்ள குறுகிய குகைப் பாதை வழியே நுழைந்து, வெளியேறி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.

அண்மையில் ஆந்திராவைச் சேர்ந்த 36 வயது ஆடவர் குகைக்குள் நுழைந்தபோது அதில் சிக்கிக்கொண்டார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் பலனில்லை. அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் குகைப்பாதையில் சிக்கித் தவிக்க நேரிட்டது.

இதையடுத்து குகைக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கென புதிய நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நாள்களில் வழிபாட்டு நேரம் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்